அரசால் தடை செய்யப்பட்ட 200 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்..!

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்:,.. குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருள் 500 கிலோ விற்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டை முதலியாண்டா தோட்ட தெருவில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல் லிப் போன்ற புகையிலை பொருட்கள் குடோனில் பதிக்கி கடைகளில் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூலிப், பான் மசாலா போன்ற 600 கிலோ பொருட்களை பறிமுதல் செய்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 குடோனுக்கு உடனடியாக சீல் வைத்து, அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி விற்று வந்த குமார் என்பவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குறிப்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் கலந்து கொண்டு இருந்த நிலையில் அவர்களுக்கு தகவல் கிடைத்தவுடனேயே உணவு திருவிழா உடையோடு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர நடவடிக்கையை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, உணவு பாதுகாப்புத்துறை சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ்குமார், 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலைப் பொருட்கள் தேனாம்பேட்டை பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது, அதனைத் தொடர்ந்து சோதனை நடத்திய போது, ஒரு குடோனில் 250 கிலோவும் , மற்றொரு குடோனில் ஒரு 350 கிலோ போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்த குற்றச் செயலில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். உணவு பாதுகாப்புத் துறைக்கு தீவிர நடவடிக்கை எடுக்க சொல்லி தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது, அதைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறது என்று கூறினார்.

மேலும், சென்னையை பொறுத்தவரை எந்தெந்த கடைகளில் இதுபோன்று விற்கப்படுகிறதா என்பதை நாங்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம் எனவும், மாவா போன்ற பொருட்களை விற்றால் கிரிமினல் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதுவரை சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை மூலம் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட  கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் வெளி மாநிலங்களில் இருந்து பழ வண்டிகள், டிராவல்ஸ், போன்ற வண்டிகளில் இவர்கள் இது போன்ற பொருட்களை எடுத்து வருகிறார்கள் காவல்துறையினரையும் மீறி இது போன்ற பொருட்கள் தமிழ்நாட்டின் உள்ளே வருகிறது. இதற்கான தொடர் நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com