52 வயது பெண்ணுக்கும் 21 வயது இளைஞனுக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு... கொலையில் முடிந்த திருமண பேச்சு வார்த்தை!

அப்போது சரவணகுமார் ஆத்திரத்தில் சரஸ்வதியை தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது...
52 வயது பெண்ணுக்கும் 21 வயது இளைஞனுக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு... கொலையில் முடிந்த திருமண பேச்சு வார்த்தை!
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் 52 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்த 21 வயது இளைஞன். திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் கொலை செய்யப்பட்ட பெண். மதுரை மாவட்டம் கூடகோவிலைச் சேர்ந்த சரவணகுமார் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளியும், சொத்தத்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணும் பிப்ரவரி மாதம் காணாமல் போயிருந்தனர். அவரது சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், திருப்புவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். காவல்துறையின் விசாரணையின்போது 21 வயதான சரவணகுமார், 52 வயதான சரஸ்வதியுடன் உறவில் இருந்தது தெரியவந்தது.

விசாரணையின்போது, ​​பிப்ரவரி 11 அன்று கூடகோவிலில் உள்ள தனது பண்ணைக்கு சரஸ்வதியை அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சரவணன் தெரிவித்தார். தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி சரஸ்வதி வற்புறுத்தியுள்ளார். இதனால் திருமணம் தொடர்பான தகராறு காரணமாக இருவருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சரவணகுமார் ஆத்திரத்தில் சரஸ்வதியை தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

குற்றத்தை மறைப்பதற்காக, சரவணன், சடலத்தை அருகில் தண்ணீர் நிரம்பியிருந்த ஒரு ஆழமான கல் குவாரிக் குழியில் வீசியுள்ளார். இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக தேடப்பட்டு வந்த சரவணகுமாரை போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்தனர். அங்கிருந்த கல் குவாரிக் குழி மிகவும் ஆழமாக இருந்ததால், சடலத்தை மீட்பதற்காக சென்னையிலிருந்து ஒரு குழு வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் குற்றம் நடந்த இடத்தை அடையாளம் கண்டு, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் மீட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். தற்போது சரவணகுமார் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவம் மதுரை மாவட்ட எல்லைக்குள் நடந்திருப்பதால், விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கை மதுரை மாவட்ட காவல்துறைக்கு மாற்றும் பணியில் திருப்புவனம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com