

புதுச்சேரியில் வீட்டின் மாடியிலிருந்து பெண் தவறி அருகில் இருந்த உயர் அழுத்த மின் ஒயர்கள் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை ஜெயம் நகரில் வசித்து வரும் சுரேஷின் மனைவி சூர்யா (29), இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஒரு வருட காலமாக மன அழுத்ததில் இருந்த சூர்யா அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் அதற்கான மாதிரிகைகளும் எடுத்துவந்துள்ளார்.
இதனிடையே இன்று வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, திடீரென எழுந்து தனது வீட்டின் மாடிக்கு சென்ற நிலையில் அங்கிருந்து விழுந்துள்ளார். அங்கே உயரழுத்த மின் வையர்கள் இருந்ததால் அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்துறையினர் இணைந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சூர்யாவின் உடலை பத்திரமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் சூர்யா மாடியில் இருந்து தெரியாமல் தவறி விழுந்தாரா? அல்லது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாடியில் இருந்து விழுந்து மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சூர்யாவின் உடலைக் கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.