'நான் காதல் ஜோடி வந்து போகும் இடம் டா.. கள்ளக்காதலுக்கு அல்ல'! - காணாமல் போன மனைவி.. மூன்றே நாளில் போட்டுக் கொடுத்த "தாஜ்மஹால்"

ஷாகிர் -ன் உறவினர் ஒருவர் அதிர்ச்சியான காட்சியை கண்டுள்ளார். காணாமல் போனதாக கூறப்பட்ட அஞ்சூம் அடையாளம் தெரியாத ஒரு நபருடன் தாஜ்மஹாலில் இருப்பது போன்ற ஒரு வீடியோவை தனது வாட்ஸ் அப் -இல் பகிர்ந்துள்ளார்.
4 child mom young boy love and go to outing in taj mahall
4 child mom young boy love and go to outing in taj mahall
Published on
Updated on
1 min read

உத்திரப்பிரதேசம்; தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்த 40 வயது நபர், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட வீடியோவில் தனது மனைவி தாஜ்மஹாலில் வேறொரு ஆணுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 40 வயதான ஷாகீர் தனது மனைவி அஞ்சூம் மற்றும் 4 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறார். அவர் ஏப்ரல் 15 ஆம் தேதி மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீடு பூட்டியிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார், அப்போது “அஞ்சூம் வீட்டில் இருந்த முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்டு, யாரும் ஏதும் கேட்பதற்கு முன்பே குழந்தைகளை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டதாக” கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாகீர் சில தினங்கள் தன் மனைவியைதானே தேடியுள்ளார். ஆனால் பலன் ஏதும் கிடைக்காததால் கடந்த ஏப்ரல் 18 -ஆம் தேதி தனது மனைவி மர்மமான முறையில் தொலைந்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஷாகிர் -ன் உறவினர் ஒருவர் அதிர்ச்சியான காட்சியை கண்டுள்ளார். ‘காணாமல் போனதாக கூறப்பட்ட அஞ்சூம் அடையாளம் தெரியாத ஒரு நபருடன் தாஜ்மஹாலில் இருப்பது போன்ற ஒரு வீடியோவை தனது வாட்ஸ் அப் -இல் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ந்த ஷாகிர் ‘அந்த அடையாளம் தெரியாத நபர் தன்னோடு வேலை பார்ப்பவர் என்பது தெரிய வந்துள்ளது’ மேலும் மனைவி காணாமல் போகவில்லை, திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளததால் காதலுடன் சென்றுவிட்டார் என்று. அதுவும் வீட்டை விட்டு வெளியேறிய மூன்று நாட்களிலேயே காதலருடன் வாட்ஸ் அப் -இல் ஸ்டேட்டஸ் போட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com