பாதுகாப்பு பணியின்போதே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த 4 போலீஸார் போக்சோவில் கைது..!

பாதுகாப்பு பணியின்போதே சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த 4 போலீஸார் போக்சோவில் கைது..!
Published on
Updated on
1 min read

திருச்சி அருகே உள்ள முக்கோம்பிற்கு சுற்றுலா  சென்ற காதல் ஜோடியில் காதலனை விரட்டிவிட்டு சிறுமியான காதலியை பாலியல் பலத்காரம் செய்த வழக்கில் திருவெறும்பூர் தனிப்படையை சேர்ந்த ஒரு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் கைது. 

திருவெறும்பூர்  அருகே உள்ள கண்ணாங்குடியை சேர்ந்த இளைஞரும் துவாக் குடியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு இந்த காதல் ஜோடி சுற்றுலா தளங்களில் ஒன்றான திருச்சி முக்கொம்பு பகுதிக்கு வந்துள்ளனர். 

அப்பொழுது அங்கு திருச்சி மாவட்ட  தனிப்படையை சேர்ந்த ஜீயபுரம் காவல்நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர் சசிக்குமார் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் உள்ள சங்கரபாண்டி, நவல்பட்டு காவல்நிலைய காவலர் பிரசாத், ஜீயபுரம் காவல்நிலைய போலீசார் சித்தார்த்  ஆகிய நான்கு பேர் அங்கு மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வந்த காதல் ஜோடி இடம் முதலில் தகராறு செய்து, பின்பு அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த 17 வயது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

அதன் அடிப்படையில் முசிறி மற்றும் திருவெறும்பூர்  சேர்ந்த காவல் சரகத்தை சேர்ந்த துணை கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார்,  இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக  கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com