“வீடியோ காட்டி பாலியல் சீண்டல்” - 5 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட சித்தப்பா.. கன்னத்தில் அறைந்து போலீசில் ஒப்படைத்த அண்ணி!

குணாலை நம்பி குழந்தையுடன் பழக்க விட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று குணால் வழக்கம் போல கமல் வீட்டிற்கு குழந்தையுடன் விளையாட வந்துள்ளார்
“வீடியோ காட்டி பாலியல் சீண்டல்” - 5 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட சித்தப்பா.. கன்னத்தில் அறைந்து போலீசில் ஒப்படைத்த அண்ணி!
Published on
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அன்வராபாத் கிராமம் ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் மர வெட்டியான் என்பவற்றின் 22 வயதுடைய மகன் குணால். இவர் படிக்காமல் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி திரிந்துள்ளார். மேலும் கஞ்சா புகைத்து சில திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இவரின் உறவு முறை அண்ணனான கமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் குணால் வீட்டின் அருகில் வசித்து வருகிறார்.

கமலுக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் குணால் அடிக்கடி கமல் வீட்டிற்கு சென்று குழந்தையுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். தம்பி தானே என கமலும், கணவரின் தம்பி என கமலின் மனைவியும் குணாலை நம்பி குழந்தையுடன் பழக்க விட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று குணால் வழக்கம் போல கமல் வீட்டிற்கு குழந்தையுடன் விளையாட வந்துள்ளார். அப்போது கமலின் மனைவி குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

சிறுது நேரம் குணால் உடன் பேசிய கமலின் மனைவி மாடுகளுக்கு தண்ணீர் அளிக்க வேண்டிய நேரம் வந்ததால் குழந்தையை குணாலிடம் விட்டு விட்டு கொட்டகைக்கு சென்றுள்ளார். பின்னர் குணாலிடம் குழந்தையை விட்டு வந்தது தவறு என நினைத்த கமலின் மனைவி கொட்டகைக்கு செல்லாமல் பாதியிலேயே வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டில் குணால் குழந்தையிடம் செல்போனில் வீடியோ வைத்து தனது மடியில் அமரவைத்து கொண்டு பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார் இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் குணாலிடம் இருந்து குழந்தையை மீட்டுள்ளார்.

Admin

பின்னர் குணாலை சரமாரியாக தாக்கி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குணாலை பிடித்து பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்த குழந்தையின் தாய் அவர் மீது புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட புதுப்பாளையம் காவல்துறையினர், செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குணாலை ஒப்படைத்தனர். 5-வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குணாலிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார். இதனை தொடர்ந்து அவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com