சென்னை பூக்கடையில் 50 இலட்சம் வழிப்பறி...!!

சென்னை பூக்கடையில் 50 இலட்சம் வழிப்பறி...!!

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பெப்பர் ஸ்ப்ரே அடித்து ரூபாய் 50 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மண்ணடி பகுதியில் மணி எக்சேஞ்ச் (Money Exchange) அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஜாஹீர் உசேன் நேற்று மாலை அலுவலக பணம் ரூபாய் 50 லட்சம் எடுத்துச் சென்றுள்ளார்.  அப்போது, சுமார் 7 மணி அளவில் யானை கவுனி பகுதி, யானை கவுனி தெருவில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறைத்து பெப்பர்ஸ் ஸ்பிரே அடித்து ரூ. 50 லட்சம் பணத்தை வழிப்பறி செய்து சென்றுவிட்டதாக ஜாகிர் உசேன் யானை கவுனி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். 

புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி யானை கவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் சந்தேக நபர் ஒருவரை யானை கவுனி போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com