ஹாஸ்டலுக்குள் அத்துமீறி நுழைந்து 67 வயது முதியவர்! MBA மாணவி பாலியல் வன்கொடுமை.. தண்ணீர் கேட்டு வந்ததன் பின்னணி?

அவர் தனியாக இருப்பதை பார்த்த அவர், பொருட்களைக் கொடுக்க
sexual assault
Published on
Updated on
1 min read

ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வர் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், 67 வயதான மளிகைக் கடைக்காரர் ஒருவர் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து MBA மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தீபக் பிரதான் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, கங்காபடா பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் ஏப்ரல் 24ஆம் தேதி, சத்தீஸ்கர் பிலாஸ்பூர் நகரைச் சேர்ந்த MBA மாணவியை வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சத்தீஸ்கரில், இளம் எம்பிஏ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 67 வயதான மளிகைக் கடை உரிமையாளர், மளிகைப் பொருட்களை விநியோகிக்க வந்துள்ளார். மாணவியின் உபசரிப்பை தவறாக பயன்படுத்திய போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொருட்களைக் கொடுத்த பிறகு, அவர் ஒரு க்ளாஸ் தண்ணீர் கேட்டுள்ளார். மாணவி அதை எடுக்கச் சென்றபோது, கதவைப் பூட்டிவிட்டு, அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் புகாரைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறை விரைந்து செயல்பட்டு, அந்த முதியவரைக் கைது செய்து, பாரதிய நியாய சம்ஹிதாவின் (பி.என்.எஸ்) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

MBA படிப்பதற்காக கிராமத்திலிருந்து  நகரத்திற்கு குடிபெயர்ந்த அந்த பாதிக்கப்பட்ட மாணவி, அன்று தனியாக இருந்துள்ளார். அவர் குற்றம் சாட்டப்பட்டவரின் கடையில் இருந்து அடிக்கடி பொருட்களை வாங்கி வந்துள்ளார். விசாரணை அதிகாரியின் கூற்றுப்படி, “அவர் தனியாக இருப்பதை பார்த்த அவர், பொருட்களைக் கொடுக்க வந்ததாக கூறி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த்துள்ளார்.வீட்டை விட்டு வெளியே வசிக்கும் இளம் பெண்களின் பாதிப்புக்குள்ளாகும் நிலையை இந்த வழக்கு எடுத்துக்காட்டி, உள்ளூர் மாணவர் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுவிட்டதாகவும், குற்றவாளிக்கு எதிரான வழக்கை வலுவானதாக உறுதி செய்வதற்காக, நீதிபதி முன்னிலையில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றம் சாட்டப்பட்ட தீபக் பிரதானை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும், மிக முக்கியமான கேள்வியாக, “மகளிர் விடுதிக்குள் வெளியாட்கள் எவ்வாறு எளிதாக நுழைந்தார்?” என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா? நிர்வாக அலட்சியம் ஏதேனும் ஏற்பட்டதா? போன்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com