மாயமான 8 வயது சிறுமி.. 5 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு! ரயில் நிலையில் சுற்றி திருந்த சிறுமிக்கு.. நடந்தது என்ன?

விசாரணையில் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி சென்றுள்ளது தெரியவந்தது
sriperumbudur child missing case
Published on: 
Updated on: 
2 min read

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தில் 8 வயது சிறுமி மாயமான சம்பவம் மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வநாத் - கல்பனா தம்பதியரின் 8 வயது மகள் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). விஸ்வநாத் - கல்பனா தம்பதியினர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சிறுமி தனது தாய் மற்றும் தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கல்பனா தனது சொந்த மாநிலமான ஜார்கண்டிற்குச் குழந்தையை விட்டுவிட்டு சென்றுள்ளார். இதனால் சிறுமி தனது தாய், தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (அக் 16) சிறுமி வீட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறுமி மாயமானது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமி காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமி அங்கிருந்து எங்கு சென்றார், அவருடன் யாரேனும் சென்றார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் விசாரணையில் சிறுமி, அங்கிருந்து சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்திற்கு பூந்தமல்லியில் இருந்து பேருந்து மூலமாக சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை எழும்பூர் ரயில்வே நிலையத்தில் சிறுமி அங்கும் இங்கும் வழி தெரியாமல் சுற்றி வந்ததை அறிந்த ரயில்வே போலீசார், சனிக்கிழமை காலை சிறுமியை மீட்டு கெல்லீஸீல் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் அனுப்பி உள்ளனர். தகவல் அறிந்து நேரடியாக குழந்தைகள் காப்பகத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு சிறுமியின் அடையாளத்தை கண்டு, மாயமான சிறுமி தான் என்பதை உறுதி செய்து, சிறுமியை மீட்டு மனநல ஆலோசனை வழங்க எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காணாமல் போன 8 வயது சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்களிடையே பெரும் மன நிம்மதியை ஏற்படுத்தியதுடன் காவல்துறையினரையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி இன்று வரை கிடைக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாயமான சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். செஞ்சி சிறுமி மாயமாகி இன்று வரை 10 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் பல்வேறு தேடுதல் பணிகளை தொடர்ந்து வருகிறது காவல்துறை

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com