
புதுக்கோட்டை: திருநாளூர் பகுதியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (19) மற்றும் வேறு 16 வயதுடைய ஒரு சிறுவன் மீது அறந்தாங்கி மகளிர் காவல் துறையினர் போஸ்கோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் பகுதியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று காலையில் பள்ளிக்கு வந்த போது பள்ளியின் அருகே இடையில் வழிமறித்த மர்ம நபர்கள் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
ஆனால் அந்த சிறுமி அந்த நபர்களிடமிருந்து கையை கடித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து பள்ளிக்கு ஓடிவந்து ஆசிரியரிடம் கூறியதாக கூறப்படுகிறது, இந்த சம்பவம் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து பள்ளியில் நேற்று அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தகுமாரி ஆகியோர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர் ,
அந்த விசாரணையில் அந்த பகுதியில் வசிக்கும் பாண்டியராஜனோடு சேர்ந்து வேறு ஒரு சிறுவன் இந்த செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. அதன் அடிப்படையில் பாண்டியராஜன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் உண்மையை ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பாண்டியராஜன் மற்றும் 16- வயது உடையவேறு ஒரு சிறுவன் உட்பட இரண்டு பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 16 வயதுடைய சிறுவன் தலைமறைவாக உள்ளதால் சிறுவனை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.