மதுரையில் 14 வயது பள்ளி மாணவனை கடத்தி 2 கோடி கேட்டு மிரட்டல்

மதுரையில் 14 வயது பள்ளி மாணவனை கடத்தி  2 கோடி கேட்டு மிரட்டல்

மதுரையில் 7ம் வகுப்பு மாணவனை மர்மகும்பல் கடத்தி 2 கோடி ரூபாய் கேட்டு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகியுள்ளது.

மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்த மைதிலி ராஜலட்சுமி என்பவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவனை ஒரு கும்பல் கடத்தி வைத்து கொண்டு மாணவனின் தாய் மைதிலியிடம் போனில் தொடர்பு கொண்டு 2 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தது. இதுகுறித்து தாயார் மைதிலி அளித்த புகாரின்பேரில் போலீசார் சிறுவனை கடத்தி மிரட்டிய கும்பலை விரட்டி சென்றது. இதனால் சுதாரித்துக் கொண்ட மர்மகும்பல், மதுரை - நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் மாணவனை இறக்கிவிட்டு தப்பி சென்றது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com