மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் பலி..! கதறி அழும் குடும்பத்தார்..!

வினோத், பார்த்திபன் இருவரும் தாக்கி பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு ...
death
death
Published on
Updated on
1 min read

மின்சார பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த பணியாளர்களின் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு. இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியில் மின்சார வாரிய துறையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளர்கள் குமரேசன் (45), வினோத்(25),  பார்த்திபன்(30)  ஆகிய மூன்று பேரும் கல்புதூர் பகுதியில் மின்சார பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் சம்பவ இடத்திலேயே குமரேசன் (45) பரிதாபமாக உயிரிழந்தார்.

வினோத், பார்த்திபன் இருவரும் தாக்கி பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வழங்கப்பட்டு வருகிறது.

பராமரிப்பு பணியின் ஒப்பந்த முறையில் மின்சாரத் துறையில் பணியாற்றி வந்த நபர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் உயிரிழந்த குமரேசனின் உறவினர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையின் முன்பு மின்வாரியத் துறையில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் உயிரிழந்துள்ள குமரேசனின் குடும்பத்தாரையும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உள்ள நபர்களையும் சந்தித்து ஆறுதல் கூட தெரிவிக்க வரவில்லை என குற்றச்சாட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com