ஒரு சமூக வலைதளப் பதிவுக்கு மரண தண்டனையா? ஈரானில் 23 வயது மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி!

600-க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக 'ஈரான் மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஒரு சமூக வலைதளப் பதிவுக்கு மரண தண்டனையா? ஈரானில் 23 வயது மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி!
Published on: 
Updated on: 
1 min read

ஒரு "போஸ்ட்" இட்டதற்கு தூக்குத் தண்டனையா?! ஈரான் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்

ஈரானிய இளம்பெண்ணுக்கு மரணக் கயிறு!!!

ஈரானில் சர்வாதிகாரத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரு இளம் பெண், தனது சொந்த நாட்டிலேயே மரண தண்டனையின் நிழலில் நிற்பது மனிதநேயமுள்ள அனைவரையும் வேதனையடைய செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி, நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் அரசு நிர்வாகத்தின் தோல்விகளுக்கு எதிராக ஈரானில் மக்கள் புரட்சி வெடித்தெழுந்த புரட்சியின்போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும், 50,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த போராட்டத்தின்போது ஈரானிய பாதுகாப்புப் படைகளால் முதன் முதலில் கைது செய்யப்பட்டவர் ஒரு மாணவி என்பது அதிர்ச்சியாகவே உள்ளது. 23 வயது கல்லூரி மாணவி நஜ்மே அமினி, இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் 262-வது பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடகப் பதிவு ஒன்றில் முகமது நபியை அவமதித்ததாகக் கூறப்படும் 'சப் உல்-நபி' குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி அவருக்கு 12 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தான் நண்பர்களுடன் இருந்தபோது மயக்கமான காளான்களை உட்கொண்ட போதையின் காரணமாகவே 'வாய் தவறிப் பேசியதாக' மாணவி தரப்பில் வாதிடப்பட்டது மன்னிப்பு கேட்கப்பட்டது. ஆனால், அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில் தண்டனை என்னவோ குறிப்பிட்ட தவறான சமூக ஊடக பதிவுக்கு என்றாலும் அவர் அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுதான் காரணம் என கூறப்படுகிறது.

மக்களை அச்சுறுத்தி எதிர்ப்புக் குரல்களை முற்றிலுமாக மவுனிக்கச் செய்ய ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனையைத் தொடர்ந்து ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகவும் இந்த ஆண்டில் மட்டும் ஏற்கனவே 600-க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக 'ஈரான் மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

கருத்து சுதந்திரத்திற்கு மரண தண்டனையை வழங்கும் இந்த ஈவு இரக்கமற்ற சட்டத்தை எதிர்த்து சர்வதேச சமூகம் உடனடியாகக் குரல் கொடுக்காவிட்டால், இதுபோன்ற பல உயிர்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. இதனைத்தொட்ரந்து இளம்பெண் நஜ்மே அமினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தங்களது கடும் கண்டனங்களையும், ஆழ்ந்த அதிர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com