

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போலி சிபிஐ அதிகாரி கைது. பத்திற்கு மேற்பட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அடையாள அட்டைகளை போலியாக தயார் செய்தது விசாரணையில் அம்பலம்!
திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கு நேர்காணலுக்கு வந்துள்ளார். சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த நபரை சோதனை செய்தபோது அவரிடம் சிபிஐ மற்றும் மத்திய அரசு காவல் பணிகள் சேர்ந்து போன்ற பத்திற்கும் மேற்பட்ட போலியான அடையாள அட்டைகள் இருந்துள்ளது. இது மட்டுமல்லாமல் சில தனியார் ஊடகங்கள் மற்றும் கட்சி அடையாள அட்டையும் இருந்துள்ளது. அதில் தமிழக வெற்றிக்கழக அடையாள அட்டையும் உள்ளது. மேலும் அரசு துறைகளின் அடையாள அட்டைகளும் வைத்துள்ளார்.
காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வேல்முருகன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலியான அடையாள அட்டைகள் தயாரித்ததும், அதன் மூலம் மோசடி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் தற்போது காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அடையாள அட்டையை போலியாக தயார் செய்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்க்கு முன் இந்த தையலை அட்டைகளை பயன்படுத்தி வேறு ஏதும் மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளாரா எனும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.