
மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் நகையை எடுக்க கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கியபடி தொங்கவிட்ட சம்பவத்தால் அதிர்ச்சி.
சென்னை போரூர் ஆர்.இ நகர் பகுதியில் வசித்து வருபவர் காந்திமதி(70). இவர் நேற்று இரவு தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். பின்னர் இது குறித்து எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போரூர் போலீசார் இறந்த நிலையில் சடலமாக கிடந்த மூதாட்டியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் மூதாட்டி கழுத்தில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த நகையை எடுப்பதற்காக கழுத்தை நெருக்கி கொலை செய்துவிட்டு மூதாட்டி தூக்கில் தொங்கியபடி நாடகமாடி இருப்பது தெரியவந்தது.
மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வந்த நிலையில் மூதாட்டியின் பக்கத்துக்கு வீட்டுக்காரரான அஜய் என்ற நபர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த அஜயை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
70 வயது மூதாட்டி அணிந்திருந்த செயினை பறிப்பதற்காக மூதாட்டி கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட படி நாடகமாடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.