
திண்டிவனம் அருகே போலீஸ் வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையிலிருந்து சென்னையை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரை திருவண்ணாமலையைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் ஓட்டி வந்தார். இதேபோன்று திண்டிவனத்தில் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்திற்கு பாதுகாப்பு பணிக்காக போலிஸ் வாகனம் ஒன்று மேல்மலையனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், இந்த இரண்டு வாகனமும் திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தின் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தில் வந்த கலால் இன்ஸ்பெக்டர் இளவழகி, டிரைவர் காளிதாஸ் உட்பட நான்கு போலீசார் காயமடைந்தனர்.
இதே போன்று வேனில் வந்த டிரைவர் அசாருதீன் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த ரோஷனை போலீசார் காயம் அடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சரி செய்தனர். இந்த விபத்து குறித்து ரோசனை போலிசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றார்கள். இந்த விபத்தால்
இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது