
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன அலெரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கலையரசன் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மாமன் மகளான 11ம் வகுப்பு படிக்கும் 17வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
பின் 2019ஆம் ஆண்டு வேறு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறி தலைமறைவாகி உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி அளித்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கலையரசனை கைது செய்தனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.