கொலை செய்யப்பட்ட பரமசிவம்
கொலை செய்யப்பட்ட பரமசிவம்

என் தங்கச்சிய பத்தி பேச எவ்ளோ தைரியம் உனக்கு? உயிர் நண்பன் தலையில் கல்லைப் போட்ட இளைஞர்

மதுபோதையின்போது தங்கை பற்றி பேசியதால் ஆத்திரமடைந்த இளைஞர் செய்த படுபயங்கர காரியம்
Published on

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த ஓடக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். 28 வயதான இவர், அதே பகுதியில் கோழிப்பண்ணையில் வேலை பார்த்ததோடு, பால் வியாபாரமும் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்த பரமசிவம், மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி வடம்பச்சேரி பகுதியில் பரமசிவம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பரமசிவத்தின் நெருங்கிய நண்பர் வரதராஜன் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.

கொலையாளி வரதராஜன்
கொலையாளி வரதராஜன்

இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது தகவலொன்று வெளியானது. பால் வியாபாரியான பரமசிவம், நெருங்கிய நண்பர்களான வரதராஜன், பார்த்திபன் ஆகியோருடன் மது அருந்தி வந்தனர்.

அப்போது வரதராஜனின் தங்கை குறித்து பரமசிவம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வரதராஜன், பரமசிவம் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தார்.

கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொள்ளும் காட்சி
கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொள்ளும் காட்சி

பின்னர் பார்த்திபனிடம் இதுகுறித்து எதுவும் தெரியப்படுத்த வேண்டாம் என கூறியவர் நடந்த சம்பவத்தை மூடி மறைத்தார். இதையடுத்து சுல்தான்பேட்டை காவல்துறையினர் நடவடிக்கையின் பேரில் கொலையாளி வரதராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com