திண்டிவனம் அருகே வேலை இல்லா விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜக்காம்பேட்டையில் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டுப் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பதும், வேலை இல்லா விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. மேலும் ஜெயப்பிரகாஷ் தற்கொலை செய்வதற்கு முன்பாக தன் வீட்டிற்கு கொரியர் மூலம் பணம், செல்போன், விஷ பாட்டிலுடன் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளார்.