பள்ளி மாணவி கர்ப்பமான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது!!

பள்ளி மாணவி கர்ப்பமான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர்  போக்சோவில் கைது!!
Published on: 
Updated on: 
1 min read

அந்தியூர் அருகே பள்ளி மாணவி கர்ப்பமான  விவகாரத்தில்  இளைஞர் ஒருவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த மகாதுரை  கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும்  11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மகாதுரை உல்லாசமாக இருந்துள்ளார். இதனிடையே அந்த மாணவி  கர்பமானதை அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பள்ளி மாணவி கர்ப்பமான  விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் மகாதுரை என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com