அதிரடி காட்டும் ஆவடி ஆணையாளர் ..! காவலர்களை களமிறக்கி குட்கா பறிமுதல்..!

அதிரடி காட்டும் ஆவடி ஆணையாளர் ..! காவலர்களை களமிறக்கி குட்கா பறிமுதல்..!
Published on
Updated on
1 min read

போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் அதிரடி காட்டும் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர்; ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் 150 காவலர்களை களமிறக்கி 113 கிலோ குட்கா பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

இன்று 21.11.2023 குட்கா மற்றும் கூல்-லிப் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகம் முழுவதும் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சோதனையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அம்பத்தார். ஆவடி, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ், எண்ணூர், மணலி, போரூர், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையில் புகையிலை பொருட்கள் குட்கா. கூல்-லிப் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 146 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 23 கடைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிலை பொருட்கள் இருப்பது இந்த 23 கடைகளும் பூட்டி வைக்கப்பட்டு விற்பனையை நிறுத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

சோதனையின் போது மொத்தம் 113 கிலோ 850 கிராம் குட்கா, கூல்-லிப் மற்றும் பிற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் விதிகளை மீறியவர்களுக்கு ரூ.1,07,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தொடர்பான அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com