மீண்டும் ஒரு கலாஷேத்ரா; நடன ஆசிரியருக்கு தர்ம அடி!

மீண்டும் ஒரு கலாஷேத்ரா; நடன ஆசிரியருக்கு தர்ம அடி!
Published on
Updated on
1 min read

வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் நடன ஆசிரியர் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அவருக்கு சிறுமியின் பெற்றோர் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

சென்னையில் பிரபல தனியார் பள்ளியாக செயல்பட்டு வரும் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் நடன ஆசிரியர் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதனையடுத்து தனக்கு நேரிட்டதை சிறுமி பெற்றோர்களுடன் தெரிவிக்கவே இரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல் அங்கு சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடன ஆசிரியர் வேணுகோபாலை வரவைத்து சரமாரியாக தர்ம அடி கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் பெற்றோரிடம் அடி வாங்கியதால் வேணுகோபாலை பாதுகாப்பாக  காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

சிறுமியின் பெற்றோர்களின் புகாரின் பேரில் நடன ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கலாஷேத்ரா விவகாரத்தில் பெண்களுக்கு ஹரி பத்மன் என்ற உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியர்  கைது செய்யப்பட்டுள்ளது கல்வி நிலையங்களில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com