“காட்டுப்பகுதியில் மாணவனுடன் தனியாக இருந்த உதவி பேராசிரியர்” - . திடீரென வந்த போதை கும்பல்… வைரலான வீடியோவால் சிக்கல்!

அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் செல்போனில் பேராசிரியர் ஷமீல் அகமதுவை தொடர்ந்து தொடர்பு கொண்டு...
Ambur Professor Assault
Ambur Professor Assault
Published on
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், உதவி பேராசிரியர் ஒருவரை மிரட்டி தாக்கியதுடன், அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்று, சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படும் போதை ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஷமீல் அகமது, வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பள்ளி மாணவர் ஒருவருடன் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் இருந்த போதை ஆசாமிகள் சிலர், பேராசிரியர் மற்றும் மாணவனை வழிமறித்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து, “இங்கு எதற்கு வந்திருக்கிறீர்கள், இந்த நேரத்தில் உங்களுக்கு என்ன வேலை..” என கேட்டு ஷமீல் அகமதுவை மிரட்டி அவரது கன்னத்தில் தாக்கியதுடன், அவரிடம் இருந்த செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், பேராசிரியரை மிரட்டி தாக்கிய சம்பவத்தை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாகவும், பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் செல்போனில் பேராசிரியர் ஷமீல் அகமதுவை தொடர்ந்து தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், பேராசிரியர் மற்றும் மாணவனை மிரட்டி தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை கைப்பற்றி, அதில் இடம்பெற்றுள்ள நபர்களின் அடையாளங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பேராசிரியரிடம் இருந்து பறிக்கப்பட்டதாக கூறப்படும் செல்போன் மற்றும் பணம் தொடர்பாகவும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவும் போலீசாரின் விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. உதவி பேராசிரியரை மிரட்டி தாக்கியதுடன், பணம் மற்றும் செல்போனை பறித்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படும் நபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை பிடிக்க ஆம்பூர் நகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com