
ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மனைவி கலைச்செல்வியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து அவருடன் சுரேஷ்குமார் சண்டையிட்டு வந்ததாகத் தெரிகிறது.
தொடர்ந்து இதேபோல் மீண்டும் சுரேஷ்குமார் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்திரமடைந்த கலைச்செல்வியின் உடன்பிறந்த சகோதரர்கள் கணேசன், கார்த்திக் ஆகியோரும், தாய்மாமன் ஆறுமுகமும் சுரேஷை கத்தியால் சரமாரியாகக் குத்தினர்.
இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், கொலை செய்து விட்டுத் தப்பிய மூவரையும் தேடி வருகின்றனர்.