“9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல்” - திட்டமிட்டு கொலை செய்த கள்ளக்காதலன்.. யார் இந்த கல்யாணி?

ஆண் குழந்தை வேண்டுமென கல்யாணியின் மகனை பணத்திற்கு வாங்கியுள்ளார்...
Andhra Pradesh Kalyani Murder Case (kalyani and shafiq)
Andhra Pradesh Kalyani Murder Case (kalyani and shafiq)
Published on: 
Updated on: 
2 min read

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிமேடு பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதுடைய கல்யாணி. சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவர் காப்பகத்தில் வளர்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் வெளியில் வந்த இவர் மங்களகிரி பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவுஸ் முகைதீன் என்பவருடன் கல்யாணிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் கல்யாணி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்திருக்கிறார். எனவே மகனை பார்த்துக்கொள்ள சிரமப்பட்ட அவர் தனது உறவினரான ஷபிக் என்பவருக்கு குழந்தையை ஒரு லட்சத்துக்கு விற்றதாக சொல்லப்படுகிறது. ஷபிக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை வேண்டுமென கல்யாணியின் மகனை பணத்திற்கு வாங்கியுள்ளார். இதன் காரணமாக கல்யாணி அவ்வப்போது ஷபிக் இடம் பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்த நிலையில் கல்யாணி அவ்வப்போது ஷபிக் இடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். அவ்வாறு பணம் கொடுக்கவில்லை என்றால் குழந்தை வாங்கிய விவகாரத்தை வெளியில் சொல்லிவிடுவேன் என டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஷபிக் கல்யாணியை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த (செப் 17) ஆம் தேதி தனது வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். பின்னர் அவரிடம் வாக்குவாதம் செய்து கத்தியால் குத்தி கொலை செய்து உடலை 9 துண்டுகளாக வெட்டி இப்ராஹிம்பட்டினம் பகுதியில் உள்ள கூலிங் கால்வாயில் வீசியுள்ளார்.

Andhra Pradesh Kalyani Murder Case(kalyani and hand tatoo)
Andhra Pradesh Kalyani Murder Case(kalyani and hand tatoo)

தொடர்ந்து (செப் 18) ஆம் தேதி கால்வாயில் மனித உடல் பாகங்கள் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தும் கொலை தொடர்பாக உடனடி துப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, கால்வாயில் இருந்து கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களில் இருந்த ஒரு கையில் காணப்பட்ட டாட்டூவை போலீசார் கவனித்தனர்.

அந்த டாட்டூவின் புகைப்படத்தை போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அது தொடர்பாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனை பார்த்த கல்யாணியின் தம்பி நாகராஜ், அந்த டாட்டூ தனது சகோதரியின் கையில் இருந்ததாக அடையாளம் கண்டு போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது. விசாரணையில், கல்யாணி ஷபிக்கிற்கு குழந்தையை விற்றதும் பின்னர் இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே போலீசார் ஷபிக்கை மீது சந்தேகமடைந்து அவரது செல்போனை பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் சம்பவத்தன்று கல்யாணிக்கு 69 முறை போன் செய்துள்ளது தெரியவந்தது. எனவே அவரை நேற்று முன்தினம் (செப் 28) பிடித்து விசாரணை நடத்தியதில் கல்யாணி தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் திட்டமிட்டு கொலை செய்து மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த “பவானி கொலை” போல உடலை வெட்டி கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார். திருமணத்திற்கு மீறிய உறவு மற்றும் பண தகராறில் பெண் கொல்லப்பட்டு உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com