
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட ஏர்ராவாரி பாளையம் வட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரவாணி. திருமணம் முடிந்த இவர் கடந்த மாதம் 21ஆம் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்ற நிலையில், அங்கு வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற முகவர் செங்கல்ராஜா மற்றும் பாபாஜி ஆகியோர், தனி அறையில் அடைத்து வைத்து, உணவு கொடுக்காமல், தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக, கண்ணீர் மல்க செல்ஃபி வீடியோ எடுத்து, தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி, குடும்பத்தாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளம்பெண்ணின் செல்ஃபி வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மற்றும் மாமியார், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஸ்ரவாணியை மீட்டுத் தரக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.