முதல் மனைவி இருக்கும் போதே இன்னொரு மனைவி.. "இருவர் தற்கொலை முயற்சி"?.. மருத்துவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

ஓசூர் அருகே பெண் மருத்துவர் ஒருவர் அவரது வீட்டின் 3-வது மேல் தளத்திலிருந்த குதித்து தற்கொலை செய்த நிலையில் சிசிடிவியில் பதிவை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் மனைவி இருக்கும் போதே இன்னொரு மனைவி.. "இருவர் தற்கொலை முயற்சி"?.. மருத்துவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
Published on
Updated on
1 min read

ஓசூர் அருகே நவதி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் மருத்துவர் நந்தினி. இவரது கணவர் முனியப்பா. இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், முதல் மனைவியை பிரிந்து வாழ்வதாகக்கூறி, இரண்டாவதாக நந்தினியை திருமணம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முனியப்பா இரண்டாவதாக நந்தினியை திருமணம் செய்தது தெரியவந்ததால் அவரிடம் சென்று முதல் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் முனியப்பாவும், நந்தினியும் இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டனர். ஆனால், மருத்துவரான நந்தினி நேற்று நள்ளிரவு அவரது வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், இதுகுறித்து போலீசார் முனியப்பாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com