அரியர் பயமா.... மருத்துவ மாணவி எடுத்த துயர முடிவு.... கடிதத்தில் இருந்தது என்ன?!!

அரியர் பயமா.... மருத்துவ மாணவி எடுத்த துயர முடிவு.... கடிதத்தில் இருந்தது என்ன?!!

சுயமாக எடுத்த முடிவு, தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு 10வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்துள்ளார்.

மருத்துவ மாணவி:

சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் ராமசுப்பு.  ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான இவர் தற்போது மெட்ரோ ரயில் அட்வைசராக பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.  முதல் மகள் திருமணம் நடைபெற்று சென்ற நிலையில், இளைய மகள் நித்யஸ்ரீ கே.கே நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

திடீரென:

இந்த நிலையில் இன்று காலை நடைபயிற்சி சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய நித்யஸ்ரீ, திடீரென 10வது மாடி படிக்கெட்டில் இருந்த ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதில் உடல் சிதறி மாணவி நித்திய ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  பின்னர் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர் மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே அசோக் நகர் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். 

உருக்கமான கடிதம்:

தகவலின் பேரில் போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் தற்கொலைக்கு முன்பு வீட்டில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.  அந்த கடிதத்தில் தனது தற்கொலை சுயமாக எடுத்த முடிவு எனவும் தனது பெற்றோர் நல்லவர்கள் எனவும் அடுத்த மாதம் நீங்கள் திட்டமிட்டப்படியே யூரோப் சுற்றுலா செல்லுங்கள் எனவும் என்னை பற்றி கவலை பட வேண்டாம் எனவும் எழுதப்பட்டுள்ளது 

வழக்குப்பதிவு:

பின்னர் இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், இன்று செமஸ்டர் தேர்வு நடக்கின்ற சூழலில், கடந்த இரண்டு நாட்களாக நித்யஸ்ரீ சரியாக படிக்கவில்லை எனவும் அரியர் வைத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

விசாரணை:

மாணவியின் தற்கொலைக்கு காரணம் அரியர் பயமா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com