இதற்கெல்லாமா பயன்படுது கூகுள் மேப்... ஏடிஎம் கொள்ளையர்களின் அதிர்ச்சி தகவல்கள்...

ஏடிஎம் கொள்ளையர்கள் கூகுள் மேப்பை பயன்படுத்தி கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கெல்லாமா பயன்படுது கூகுள் மேப்... ஏடிஎம் கொள்ளையர்களின் அதிர்ச்சி தகவல்கள்...
Published on
Updated on
1 min read
கூகுள் மேப் மூலமாக எந்த இடத்தில் எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம்கள் உள்ளது என்பதை குறித்து வைத்துக்கொண்டு அதன்படியே கொள்ளையடித்துள்ளனர். விமானம் மூலம் சென்னைக்கு வரும் அமீர், மீனம்பாக்கத்தில் இருந்து ஓலா அல்லது உபர் என்ற செயலி மூலமாக கார் புக் செய்வது வழக்கம் என்றும் பின்னர் நேரடியாக கோடம்பாக்கம் வந்து அங்கு மற்றொரு SFS எனும் செயலி மூலமாக இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்தும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 
பின்னர் வாடகைக்கு எடுக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை வைத்துக் கொண்டு சூளைமேடு பாண்டிபஜார் ராமாபுரம் வடபழனி வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். 17,18 ஆகிய தேதிகளில் கொள்ளையடித்த மொத்த பணம் சுமார் 20 லட்சத்தை தரமணியில் உள்ள கோடாக் வங்கியின் டெபாசிட் ஏடிஎம் மூலமாக அமீர் அவரது தாயார் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியது தெரியவந்துள்ளது.
மேலும் அரியானாவில் உள்ள அவரது தாயாரின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வங்கி கணக்கில் எந்த பணமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளையர்களுக்கு இருசக்கர வாகனத்தை செயலி மூலமாக வழங்கிய செயலியின் உரிமையாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com