ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை...

அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து சுமார் நான்கரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.  
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை...
Published on: 
Updated on: 
1 min read

அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து சுமார் நான்கரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.  

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில், திருப்பதி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆக்சிஸ் வங்கியின் ATM செயல்பட்டு வருகிறது. காவலாளி இல்லாமல் இயங்கி வரும் இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 15-ம் தேதி எட்டரை லட்சம் ரூபாயை வங்கி நிர்வாகம் வைத்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் ஏ.டி.எம். மைத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள், வெல்டிங் மிஷின் மூலம், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவம் இடத்திற்கு சென்று, சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.டி.எம். இயந்திரத்தில், சுமார் நான்கரை லட்சம் ரூபாய் வரை இருந்திருக்கலாம் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com