
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளியான இவர் ஆண்டிபட்டி காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
புதிதாக ஏழரை லட்சம் ரூபாய் வீட்டு கடனுக்கு பதிவு செய்து, அந்தப் பணம் தனது வங்கிக்கணக்கில் வந்துவிட்டதா? என்று ஆண்டிபட்டி எஸ்பிஐ ஏடிஎம்மில் சோதனை செய்து பார்க்க சென்றுள்ளார். தனக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த ஒரு நபரிடம் உதவி கேட்க, அந்த நபரும் மகிழ்ச்சியுடன் உதவ முன்வந்துள்ளார். உதவி என்கிற பேரில் தன்னிடம் இருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு சேகர் -ன் ஏடிஎம்ஐ எடுத்து கொண்டு சென்று விட்டார்.
இதையறியாமல் வீட்டிற்கு வந்த சேகருக்கு தனது வங்கிக்கணக்கிலிருந்து தொடர்ந்து பணம் எடுக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த சேகர் வங்கி கிளை மேலாளரிடம் சென்று கேட்ட போது,
கூலி தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு, அதனை வைத்து நகைக்கடையில் தங்கநகை எடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கூலி தொழிலாளி ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரை வைத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கூலி தொழிலாளியை ஏமாற்றிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். நூதன முறையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றி மர்மநபர் ஒருவர் பணத்தை கொள்ளை அடித்துள்ள சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இதற்கான சிசிடிவி ஆதாரமும் உள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்