பிரபல ரவுடி மீது தாக்குதல்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பிரபல ரவுடி மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரபல ரவுடி மீது தாக்குதல்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
Published on
Updated on
1 min read

சென்னை: புளியந்தோப்பு காந்தி நகர் 8 வது தெருவில் வசித்து வருபவர் சேட்டு எனப்படும் கார்த்திகேயன். அவரது வயது 36. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரஞ்சித் என்பவரை கொலை செய்த வழக்கில்,கைது செய்யப்பட்டு கடந்த 14 ஆம் தேதி தான் சிறையில் இருந்து  வெளிவந்துள்ளார் என கூறப்படுகிறது 

இந்த நிலையில் நேற்று (30.09.22) இரவு 11.05 மணியளவில் புளியந்தோப்பு  நெடுஞ்சாலை காந்திநகர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள, பொது கழிப்பிடத்தின் உட்புறம் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் ரவுடி சேகர் தலையில் வெட்டப்பட்டு உள்ளார். அதன் பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பிரிட்ஜ் பேசின் காவல் துறையினர் மேற்கொண்ட  முதற்கட்ட  விசாரணையில் 2013 ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரஞ்சித்தின் சகோதரர் பிரேம், கூட்டாளிகள் நாய்க்கடி கார்த்தி மற்றும் நான்கு பேர் சேர்ந்து கொலை செய்தது  தெரியவந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ள நிலையில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பொது இடத்தில் நடைபெற்ற இந்த கொலை முயற்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திகேயன் இன்று காலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com