தூத்துக்குடியில் விஏஓ வெட்டி படுகொலை செய்யபட்ட நிலையில், சேலத்திலும் விஏஓ ஒருவரை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஓவான பிரான்ஸிஸ் மணல் கொள்ளை குறித்து காவல் துறையில் புகார் கொடுத்ததால், அவரது அலுவலகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராமத்தில் விஏஓவாக உள்ள வினோத்குமார் என்பவர் தன்னை சித்துராஜ் என்பவர் வெட்டி கொலை செய்ய முயற்சித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சித்துராஜ் மணல் கடத்தியதாக அவரது டிராக்டர், பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்ததால், தன்னை வீச்சரிவாளுடன் வெட்டி கொலை செய்யும் நோக்கில் விரட்டியதாக காவல் நிலையத்தில் வினோத்குமார் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படிக்க: பணி பிரிவு உபசார விழாவில் கதைக் கூறிய டிஜிபி கந்தசாமி....!!