“ராசி இல்லாத மகன் என்று சொல்லி” - சிறுவனை அடித்தே கொன்ற அத்தை! வேலூர் நரபலி சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்!

அந்த குழந்தை பிறந்த பின்பு தான் எனது தம்பி அவரது மனைவி இருவருக்கும் சண்டை வந்து பிரிந்து வாழ்ந்ததாகவும்
vellore murder
Published on
Updated on
2 min read

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் - ஆஷா தம்பதியினர் திருமணமாகி கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டு மாதமாக இருவரும் சேர்ந்து  திருப்பூரில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் 6 வயது மகன் முகிலன் கடந்த 5 ஆண்டாக பேரணாம்பட்டு டி.டி. மோட்டூரில்  உள்ள ஆஷாவின் தாய் விஜயா வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 40 நாட்களாக மேல்பட்டி பகுதியில் உள்ள ராஜேஷின் தாய் விஜயா (இவரின் பெயரும் விஜயா தான்) வீட்டில் அத்தை மற்றும் பாட்டி பராமரிப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கூறி இறந்தவர்களை வைக்கும் பிரீசர் பாக்ஸில் வைத்திருந்துள்ளனர்.  இதனை அறிந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் குழைந்து இங்கு உள்ளதா இப்போது தன தெரியும் என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுவனின் பாட்டி விஜயா மற்றும் அவரது மகள் ரேவதி (ரேவதி கணவனை பிரிந்து தனது 14 வயது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்) இவர்கள் இருவரும் மாந்திரீகம் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், வீடு முழுவதும் மாத்திரீகம் தொடர்பான பொருட்கள், தெருவில் உள்ள பொது கிணற்றில் மாத்திரீக பொருட்களை வீசுவது போன்ற தொடர் செயலில் ஈடுபட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்னர். இந்நிலையில் அமாவாசை அன்று பலி கொடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

vellore murder

இதுகுறித்து மேல்பட்டி போலீசார் குழந்தையின் அத்தை ரேவதியிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் தனது அண்ணன் மகன் முகிலனை அவரது அத்தை ரேவதி கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அந்த குழந்தை பிறந்த பின்பு தான் எனது தம்பி அவரது மனைவி இருவருக்கும் சண்டை வந்து பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறி கொடுமைப்படுத்தி உள்ளார். இதேபோல் ஜூன் 14ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை ரேவதி தோசை கரண்டியால் சரமாரியாக  அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து சிறுவன் முகிலன் உயிரிழந்தது போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

இதனையடுத்து ரேவதியை கைது செய்த மேல்பட்டி போலீசார் மேலும் இது குறித்து பாட்டி விஜயாவிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த சகோதரனின் மகனை அத்தை அடித்து கொலை செய்த சம்பவம் மேல்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com