"ஆபாச மெசேஜ்... 'என் கணவர்கள்' என சிறுவர்களை அழைத்த ஆசிரியை!" உடலுறவும் கொண்டார்களா? போலீசாரிடம் புகாரிளித்த மாணவர்கள்

சிறுவர்களில் ஒருவர், தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குறித்துப் புகார் அளிக்க, காவல் நிலையத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Russian teacher
Russian teacher
Published on
Updated on
2 min read

புகழ்பெற்ற விருது பெற்ற ஆசிரியை ஒருவர், 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களைத் தனது 'கணவர்கள்' என்று அழைத்து, அவர்களுடன் அருவருப்பான பாலியல் செயல்களில் ஈடுபட்டு, அவர்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

23 வயதான அஃபினா சிமியோனிடிஸ், இந்த இரு சிறுவர்களுக்கும் மிகவும் வெளிப்படையானப் பல செய்திகளை அனுப்பியதாகவும், சிறுவர்களை "என் கணவர்கள்" என்று குறிப்பிட்டதாலும் , அவர்களுடன் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்பட்டதாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட மனநலப் பரிசோதனையில், அந்த ரஷ்ய ஆசிரியைக்கு எந்த மனநலக் கோளாறும் இல்லை என்று கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் விசாரணைக்குத் தகுதியானவர் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன. மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிமியோனிடிஸுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றுக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஒரு காணொளியும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அந்த ஆசிரியர் சிறுவர்களில் ஒருவரிடம் ஆபாசமான வார்த்தைகளில் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஆசிரியர் பள்ளியில் பயின்ற, 2013-ல் பிறந்த இரண்டு சிறுவர்களை மையமாகக் கொண்டு இந்தக் குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அந்தச் சிறுவர்களில் ஒருவர், தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை குறித்துப் புகார் அளிக்க, தானாகவே காவல் நிலையத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சிமியோனிடிஸின் குடியிருப்பில் நடந்த கூடுதல் பயிற்சி வகுப்புகளின் போது இந்த பாலியல் அத்துமீறல் நடந்ததாக அந்தச் சிறுவன் கூறினார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வைபோர்க் நீதிமன்றம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அப்போது 22 வயதாக இருந்த அந்த ஆசிரியரின், செயல்களின் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற தன்மையை அறிந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர் தனது பாலியல் ஆசையையும் பாலியல் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கத்திற்காக அந்தச் செயல்களைச் செய்ததாக அது குற்றம் சாட்டியது. மேலும், சிமியோனிடிஸ் அந்த சிறுவர்களின் உதவியற்ற நிலையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு எதிராக மற்ற பாலியல் செயல்களையும் செய்துள்ளார் என்றும் அந்த அறிக்கை கூறியது. மேலும், சிமியோனிடிஸ் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் வெளிவருவதற்கு முன்பு, 2024 உலக இளைஞர் விழாவில் ஆற்றிய பங்களிப்பிற்காக, சிமியோனிடிஸ் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கையொப்பமிட்ட சான்றிதழையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சிமியோனிடிஸ் தாய் "உண்மையைச் சொல்வதானால், நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை" என்று கூறினார். மேலும், தன் மகளின் வகுப்பில் உள்ள அந்த சிறுவர்கள் சிமியோனிடிஸை நம்பினார்கள் என்றும் அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகளை அவரிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, "அந்த இரு சிறுவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், ஒருதலைக் காதல் சம்பந்தப்பட்டுள்ளது" என்று பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com