“பிறந்த ஒரே வாரத்தில் இறந்த குழந்தை” மருத்துவர்களின் அலட்சியப் போக்கா!?? துயரத்தில் பெற்றோர்!!

கடந்த ஒரு வார காலமாக மருத்துவர் கண்காணிப்பில் இருந்த குழந்தை இன்று காலை...
Girl baby died with in 5 days
Girl baby died with in 5 days
Published on
Updated on
1 min read

வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த ஒரு வாரமே ஆன குழந்தை உயிரிழப்பு. மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக குழந்தை உயிரிழந்து விட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் வயது 25 இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் விசாரம் பகுதியைச் சேர்ந்த காவிரி என்ற பெண்ணிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன் உள்ள  நிலையில் காவேரி மீண்டும் கருவுற்று இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த செவ்வாய் கிழமை வாலாஜா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கடந்த ஐந்தாம் தேதி அன்று அறுவை சிகிச்சை மூலமாக அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது . கடந்த ஒரு வார காலமாக மருத்துவர் கண்காணிப்பில் இருந்த குழந்தை இன்று காலை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. 

 இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தை இறந்ததற்கான காரணத்தை தெரிவிக்குமாறு மருத்துவர்களை கேட்டபோது மருத்துவர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி அடுத்த மாதம் பிரசவ தேதி குறிப்பிட்டு இருந்த நிலையில் இவர்கள் முன்கூட்டியே அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுத்ததில் சந்தேகம் உள்ளதாக குழந்தையின் பெற்றோர்கள் சந்தேகத்தை முன்வைக்கின்றனர். 

மேலும் மருத்துவரின் அலட்சியம் காரணமாக தன்னுடைய ஒரு வாரமான குழந்தை இறந்து விட்டதாக கூறி ஆவேசம் அடைந்த அஜித்குமார் தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com