

இன்றைய சமூகத்தில், இளைஞர்கள் மிகவும் சென்சிட்டிவான மனநிலையில் தான் இறக்கின்றனர். மேலும் வாழ்வின் சிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் சாவது எப்போதுமே தீர்வாகாது. படிக்கும் வயதில் சில விஷயங்களை கையாளும் பக்குவத்தை மாணவர்கள் வளர்க்காமல் விடுவதால், சில சமயங்களில் வாழ்வே நரகமாகிவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தஞ்சாவூரில் அரங்கேறியுள்ளது.
தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் B.E மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை அடுத்த திருமலை சமுத்திரத்தில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் ஆந்திராவை சேர்ந்த அஞ்சினா ரத்னா அபினவ் என்ற மாணவர் கல்லூரி விடுதியில் தங்கி B.E மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவர்களுக்கு தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர் தேர்வறைக்கு செல்போன் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த பேராசிரியர் மாணவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உலைச்சலில் இருந்த மாணவர் அபினவ் விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். ஆனால் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாழ்க்கை நிலையற்றது, அது எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தற்கொலைதான் ஒரு தீர்வு என்றால் நாட்டில் பலரும் உயிர் வாழவே முடியாது. ஒரு உயிர்தான் ஓருடல் தான் சின்ன சின்ன விஷயங்களுக்காக அவற்றை பணியம் வைத்து, அப்படி யாரிடம் எதை நிரூபிக்கப்போகிறாம். போராட்ட குணமே வாழ்விற்கான உந்து சக்தி இளம் தலைமுரையினர் அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், கல்வி நிறுவனங்களும் மாணவரக்ளின் இன்னும் பக்குவமாகவும் புரிதலுடனும் நடந்துகொள்ள வேண்டும். ஒரு கடுமையான வார்த்தையை யார் எப்படி எடுத்துக்கொள்ளுவார் என்று சொல்ல முடியாது. எனவே பேராசிரியர்களும் காலத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு உயிரும் முக்கியமானதுதான்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.