“என்ன சிம்ரன் இதெல்லாம்” கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்த கள்ள காதல்..! கையும் களவுமாக கணவனிடம் பிடிபட்டது எப்படி?

திருமணத்திற்கு முன் ஒரு தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்த மணிகண்டா என்ற மாணவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டு அது ரகசிய தொடர்பாக வளர்ந்தது...
"Manikanda, a  man who had an affair  with a married woman.
"Manikanda, a man who had an affair with a married woman. Admin
Published on
Updated on
1 min read

திருமணத்திற்கு முன் பள்ளிக்கூடத்தில் வேலை செய்தபோது அங்கு காதலனாக கிடைத்த மாணவனை இரவு நேரத்தில் வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்த மனைவியை கணவர் கையும் களவுமாக பிடித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த லக்ஷ்மன் இவர் அப்பகுதியில் இறால் பண்ணை அமைத்து நிர்வகித்து வருகிறார். இரவு நேரத்தில் யாராவது இறால்களை பிடித்து சென்று விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக தினமும் இரவு நேரத்தில் லக்ஷ்மன் தன்னுடைய இறால் பண்ணைக்கு சென்று காவல் காப்பது வழக்கம்.

அவருடைய மனைவி நாகமணி. திருமணத்திற்கு முன் ஒரு தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்த மணிகண்டா என்ற மாணவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டு அது ரகசிய தொடர்பாக வளர்ந்தது. இந்த நிலையில் நாகமணிக்கும் லக்ஷ்மனுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் நாகமணியின் நடவடிக்கைகளில் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

தன்னுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இறால் பண்ணைக்கு காவல் காக்க செல்வது போல் சென்ற லக்ஷ்மன் இரவு 12 மணி அளவில் வீட்டிற்கு திடீரென்று திரும்பி வந்தார். வீட்டின் கதவை தட்டிய போது நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை.

எனவே தன்னுடைய மகனை அழைத்து ஜன்னலை திறக்கச் சொல்லி மகனிடம் விசாரித்தபோது “மணிகண்டா என்ற நபர் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து தங்களின் அருகே தினமும் படுத்துக்கொள்வதாய்”கூறியிருக்கிறான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லக்ஷ்மன் உடனடியாக நாகமணியின் பெற்றோருக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்து அவர்களை வரவழைத்து இரண்டு பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இரண்டு பேரையும் அள்ளி சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மணிகண்டா, நாகமணி ஆகியோரை போலீசார் தனித்தனியாக அழைத்து சென்றபோது மணிகண்டா மோட்டார் சைக்கிளில் இரண்டு போலீசாருக்கு இடையில் உட்கார்ந்து கொண்டு நாகமணியை திரும்பி திரும்பி பார்த்து சென்றதுதான்  ஹைலைட்.

இறால்களை யாராவது பிடித்து சென்று விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக லக்ஷ்மன் தினமும் இரவு நேரத்தில் தன்னுடைய இறால் பண்ணைக்கு காவலுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆனால் அவருடைய மனைவியை மற்றொருவர் கவர்ந்து  சென்றது லக்ஷ்மனுக்கு சோகத்திலும் சோகமாக அமைந்துவிட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com