"ஒரே வீட்டில் 3 கொடூர கொலைகள்.." லிவ் - இன் காதலனோடு சேர்ந்து செய்த மகள்! வலைவீசி தேடப்படும் 'காதல்ஜோடிகள்'

லிவ் - இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் அவரது காதலன் கென்னத்தும் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம்
Bengaluru crime news
Bengaluru crime newsBengaluru crime news
Published on
Updated on
2 min read

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் திங்கள்கிழமையன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் அவர்களது இளைய மகள் சுப்ரியா (20) என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தம்பதியரின் மூத்த மகளின் பெயர் ஸ்வேதாவும். இவரோடு லிவ் - இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் அவரது காதலன் கென்னத்தும் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகளின்படி, ஸ்வேதாவின் பெற்றோர், கென்னத்துடனான அவரது உறவை எதிர்த்துள்ளனர். இந்த எதிர்ப்பே நடந்த கொலைகளுக்கு வழிவகுத்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. மேலும், கே.ஆர். புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சீகேஹள்ளி, தமனிக் லேஅவுட், சாய் கிரீன் அபார்ட்மென்ட்டில் கடந்த திங்கட்கிழமையன்று இந்த அதிர்ச்சிகரமான கொலைகள் நடந்துள்ளது. கொலைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவையா? என்றும், ஸ்வேதாவும் கென்னத்தும் இணைந்து செயல்பட்டனரா? என்றும் புலனாய்வாளர்கள் தற்போது விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து, கே.ஆர். புரம் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர். மேலும், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ஈஸ்ட் பாயிண்ட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. காவல்துறையினர் தரப்பில் குற்றவாளிகளைத் தேடும் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையினர் விசாரணையின் போது மேலும் பல விவரங்கள் வெளிவந்துள்ளன. குற்றம் சாட்டப்பட்ட ஸ்வேதா, கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் கடன் குறித்து அவரது பெற்றோர் அவரிடம் அடிக்கடி விசாரித்துள்ளனர். இதனால், குடும்பத்தில் பதற்றம் நிலவியதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனையடுத்து, திங்களன்று ஸ்வேதாவின் தாய் முத்துலட்சுமி மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளார். ​​ஸ்வேதாவும் கென்னத்தும் அங்கு வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். அவருடைய தந்தை சோமசுந்தரும், தங்கை சுப்ரியாவும் வெளியே சென்றிருந்தனர். பின்னர் ஸ்வேதா, கென்னத் மற்றும் முத்துலட்சுமி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக காவல்துறை சந்தேகிக்கிறது. அந்த மோதலின் போது, ​​முத்துலட்சுமியை அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொலைக்குப் பிறகு, சோமசுந்தரும் சுப்ரியாவும் வீடு திரும்புவதற்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் குளியலறையில் இரத்தக் கறைகளைக் கழுவியதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையின் கூற்றுப்படி, சுப்ரியா வீட்டிற்குள் நுழைந்தபோது, ​​ஸ்வேதா அவரைக் கட்டுப்படுத்தியதாகவும், அதன் பின்னர் கென்னத் ஆயுதத்தால் தாக்கி அவரைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஸ்வேதாவின் தந்தை சோமசுந்தர் அதே ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பலத்த காயங்கள் இருந்தபோதிலும், அவர் வீட்டிலிருந்து வெளியே ஓடிச் சென்று உதவி கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். தலைமறைவாக உள்ள ஸ்வேதா மற்றும் கென்னத் ஆகியோரைக் கண்டுபிடிப்பதற்காக காவல்துறை தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. குற்றத்திற்கான சரியான நோக்கம் மற்றும் நிகழ்வுகளின் வரிசை சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், இதுவரை எந்த விவரங்களும் பகிரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com