மனைவியுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்த கணவன்.. நண்பர்களுக்கு உடலை விருந்தளிக்கச் சொல்லி மிரட்டிய கொடுமை!

தனக்கு வேறு 19 பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கணவர் சையத் இனமுல் ஹக் தற்பெருமை பேசியதாக
மனைவியுடன் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்த கணவன்.. நண்பர்களுக்கு உடலை விருந்தளிக்கச் சொல்லி மிரட்டிய கொடுமை!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புத்தெனஹள்ளி பகுதியில், திருமணமான ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கணவர் ரகசியமாகக் கேமராவை வைத்து அந்தரங்க வீடியோக்களைப் பதிவுசெய்ததுடன், அதை வைத்து மிரட்டி, வெளிநாட்டிலுள்ள தனது நண்பர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும்படி வற்புறுத்தியதாக அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

சையத் இனமுல் ஹக் என்பவரை 2024 டிசம்பர் மாதத்தில் பாதிக்கப்பட்ட அப்பெண் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணத்தின் போது 340 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு பைக் ஆகியவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகுதான் கணவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதும், தான் அவரது இரண்டாவது மனைவி என்ற தகவலும் அப்பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. மேலும், தனக்கு வேறு 19 பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கணவர் சையத் இனமுல் ஹக் தற்பெருமை பேசியதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள், கணவர் ரகசியமாகப் படுக்கையறையில் கேமராவை வைத்து, அவர்களது அந்தரங்கத் தருணங்களைப் பதிவுசெய்துள்ளார். அந்த வீடியோக்களை வெளிநாடுகளில் இருக்கும் தனது நண்பர்கள் சிலருடன் கணவர் பகிர்ந்ததுடன், வெளிநாட்டில் உள்ள தனது தொடர்புகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு மனைவியைத் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். அப்பெண் இதற்கு மறுப்பு தெரிவித்தபோது, அந்தரங்க வீடியோக்களைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஒரு அபார்ட்மெண்ட் வாங்குவதற்காக மனைவியின் நகைகளை விற்று பணம் கொண்டு வருமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்தபோது அவரைத் தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் தன்னைத் துன்புறுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, ஒரு குடும்ப நிகழ்ச்சியின்போது கணவரின் சகோதரி தன்னை அவமானப்படுத்தியதாகவும், மைத்துனர் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில் முக்கியக் குற்றவாளியான கணவர் சையத் இனமுல் ஹக் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com