தற்கொலை செய்து கொண்ட பாஜக மாவட்ட தலைவர்...!!

தற்கொலை செய்து கொண்ட பாஜக மாவட்ட தலைவர்...!!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் பீட் மாவட்டத்தின் பாஜக தலைவர் அவரது வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது தொடர்பான விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

பாஜகவின் பீட் மாவட்டப் பிரிவுத் தலைவர் பகீரத் பியானி மீரா நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உரிமம் பெற்ற ரிவால்வரால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பியானியின் குடும்பத்தினர் விரைந்து சென்று பார்த்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

50 வயதான பாஜக தலைவரான பியானி சில உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com