பூஜை பொருள் விற்பனை கடையை அடித்து நொறுக்கிய பாஜகவினர் கைது!

காஞ்சிபுரத்தில் பூஜை பொருள் விற்பனை கடையை அடித்து நொறுக்கிய, பாஜக மற்றும் இந்து முன்னணியினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூஜை பொருள் விற்பனை கடையை அடித்து நொறுக்கிய பாஜகவினர் கைது!
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் பூஜை பொருள் விற்பனை கடையை அடித்து நொறுக்கிய, பாஜக மற்றும் இந்து முன்னணியினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி கோரி, இந்து முன்னனி மற்றும் பாஜகவினர் சார்பில், கடந்த 2-ஆம் தேதி காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் பூபதி என்பவர், ஆர்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடையில் சாமி  படத்திற்கு செருப்பு அணிவித்திருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கடையை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர்.

இதனையடுத்து பூபதி அளித்த புகாரின் பேரில், பாஜக மாவட்ட செயலாளர் கூரம் விசுவநாதன் மற்றும் பாஜக பிரமுகர்கள் அதிசயம் குமார், ஜீவானந்தம், ஜெகதீசன், இந்து முன்னணி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேவதாஸ், சந்தோஷ் உள்ளிட்ட 7 பேரை, சிவகாஞ்சி போலீசார் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com