மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்தூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறை மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் இணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். பின்னர் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com