
உத்தரகண்ட் மாநிலம் அல்பானி பகுதியை சேர்ந்தவர் 29 வயதான நிகில். இவர் டெல்லி திமால்பூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். நிகிலுக்கு வடக்கு டெல்லி பகுதியை சேர்ந்த 22 வயதான சோனி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து இரண்டு ஆண்டுகளாக லிவிங் டு கேதரில் வாழ்ந்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த ஜோடிகள் இதை பற்றி சோனி வீட்டில் தெரிவித்துள்ளனர்.
இருவரது வீட்டிலும் இவர்களது காதலை ஏற்றுக் கொண்ட நிலையில் சோனி வீட்டில் அவரது அக்காவின் திருமணம் முடிந்ததும் சோனிக்கும் நிகிலுக்கு திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சோனி மற்றும் நிகிலுக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக நிகில் சோனியை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சோனி நிகிலுடன் இனி வாழ முடியாது என பிரிந்து சென்றுள்ளார்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிகில் சோனியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை தொந்தரவு செய்து வந்துள்ளார். தொடர்ந்து சோனியையும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சோனி டெல்லி மஜ்னு தில பகுதியில் வசித்து வந்த தனது தோழி ரஷ்மி வீட்டிற்கு சென்றுள்ளார். காதலியை தேடி வந்த நிகிலுக்கு சோனி ரஷ்மி வீட்டில் இருப்பதும் சோனி கர்ப்பமடைந்து தனது தோழியின் உதவியுடன் கருவை கலைத்ததும் தெரியவந்துள்ளது.
இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த நிகில் சோனியை தேடி ரஷ்மி வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையே ரஷ்மியின் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகில் ரஷ்மியும் அவரது கணவரும் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த சோனியிடம் கரு கலைத்ததை பற்றியும் தன்னை விட்டு விலகியதை பற்றியும் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கோபமடைந்த நிகில் சோனியையும் அவருடன் வீட்டில் இருந்த ரஷ்மியின் 6 மாத குழந்தையையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
வெளியில் சென்று வீடு திரும்பிய ரஷ்மி மற்றும் அவரது கணவர் சோனி மற்றும் தங்களது குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோனி மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து நிகிலை தேடி வந்துள்ளனர். உத்தரகண்ட் பகுதியில் வைத்து நிகிலை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் நிகில் “என்னுடைய வாரிசை கொலை செய்த அவளும் அதற்கு துணை புரிந்த அவர்களின் வாரிசும் உயிரோட இருக்க கூடாது” என நான் தான் கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரே வீட்டில் இளம் பெண் மற்றும் 6 மாத குழந்தை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.