“மாறி மாறி இருவருடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - புதரில் வைத்து கொடூரமாக தாக்கிய கள்ளக்காதலன்.. தலை நசுங்கி இறந்த கிடந்த காளீஸ்வரி!

காளீஸ்வரி மகுடேஸ்வரனை வீட்டிற்குள் சேர்க்காமல் வெளியில் சந்தித்து பழகி வந்திருக்கிறார்...
“மாறி மாறி இருவருடன் உல்லாசத்தில் இருந்த பெண்” - புதரில் வைத்து கொடூரமாக  தாக்கிய கள்ளக்காதலன்.. தலை நசுங்கி இறந்த கிடந்த காளீஸ்வரி!
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள சிவகிரி பட்டி ஊராட்சி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய காளீஸ்வரி. இவருக்கு ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. எனவே தனியாக வசித்து வந்த காளீஸ்வரிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய மகுடேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து மகுடேஸ்வரன் காளீஸ்வரியை கவுண்டம்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்க வைத்திருக்கிறார். கழிச்சவாரி அன்ஹா வீட்டில் வசித்து வந்த நிலையில் மகுடேஸ்வரன் அவ்வப்போது சென்று தனிமையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காளீஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த குரு என்பவருடனும் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்ட நிலையில் மாறி மாறி காளீஸ்வரி இருவருடனும் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். காளீஸ்வரி வசித்து வந்த வடக்கை வீட்டின் உரிமையாளர் இதனை அறிந்து அவரை கண்டித்துள்ளார். எனவே காளீஸ்வரி மகுடேஸ்வரனை வீட்டிற்குள் சேர்க்காமல் வெளியில் சந்தித்து பழகி வந்திருக்கிறார்.

Admin

இந்த நிலையில் நேற்று காளீஸ்வரியை சந்திக்க சென்ற மகுடேஸ்வரன் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு தனிமையில் இருந்திருக்கிறார். அப்போது குருவுடனான பழக்கம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மகுடேஸ்வரன் காளீஸ்வரியை தன்னுடன் மட்டும் வாழ அழைத்த நிலையில் அவர் மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் காளீஸ்வரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி போலீஸார், காளீஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது சந்தேகத்தின் பேரில் காளீஸ்வரியின் முதல் கள்ளக்காதலன் மகுடேஸ்வரனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதல் குறித்து ஏற்பட்ட தகராறில் காளீஸ்வரியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்ததை மகுடேஸ்வரன் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com