காதல் ஜோடிகளிடையே நடைபெறும் சண்டைகள் சமீப காலமாக விசித்திரமாக இருக்கிறது. அதிலும் சில சமயங்களில் இந்த சண்டைகள் அடிதடி வரை செல்கின்றன, காதல் பேசாததால், தாயின் கண் முன்னே காதலனை கட்டையால் அடித்த காதலியின் வைரல் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை; நெசப்பாக்கத்தில் வசித்து வரும் 22 வயது இளம் பெண் ஒருவர் சட்டக்கல்லூரின் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அசோக் நகரில் வசித்து வரும் தச்சு தொழிலாளியான 21 வயது இளைஞர்க்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது பின்னர் காதலாக மாறியது. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே சிறிய தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இருவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டிருந்தனர்.
சில தினங்களாக சட்டக் கல்லூரி மாணவி போனில் அழைத்தும் அந்த காதலன் பேசத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இளம் பெண் கடும் ஆத்திரத்தில் இருந்து உள்ளதாக தெரிகிறது.
இந்த சூழலில் தான் நேற்று முன்தினம் நாளை கே.கே நகர் ஏ.பி பத்ரோ சாலை வழியாக அந்த இளைஞர் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். இதை அறிந்த காதலி தனது 19 வயது தங்கையுடன் அங்கு சென்று பேசாதது குறித்து தகராறு செய்துள்ளார். இதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த காதலி கையில் கிடைத்த மரக்கட்டை எடுத்து காதலனை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே மயங்கிய காதலனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் காதலன் மயங்கியவுடன் தங்கையும் அந்த இளம் பெண்ணும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கே.கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனை காதலி விரட்டி தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக இணைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.