என்ன கொடுமை இது.. பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை.. போக்சோ சட்டத்தில் கைது!!

ஆலங்குடியில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன கொடுமை இது.. பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை.. போக்சோ சட்டத்தில் கைது!!
Published on
Updated on
1 min read

குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது. அரசு பல்வேறு கடும் சட்டங்கள் கொண்டு வந்தாலும் இந்த குற்றங்கள் குறையவே இல்லை. அதிலும் பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுப்பது எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம்.. இத்தகைய சம்பவம் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருகிறது..

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் தனது மகள் வீட்டில் தனியாக இருக்கும் போது பலமுறை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துவந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், சிறுமி சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதி பட்டுவந்துள்ளார். இதனால், சிறுமியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்த தாய்.. இது குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அவர் கொடுத்த பேரின் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சிறுமின் தந்தை தான் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து தந்தை சேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பெற்ற மகளையே பாலியல் தொல்லை கொடுத்து தந்தை கரம்பமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com