லாரியுடன் பேருந்து மோது 4 பேர் பலி, 3 பேர் தீவிர சிகிச்சைக்கு அனுமதி...

தனியார் சொகுசுப் பேருந்தும் டேங்கர் லாரியும் மோதி 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
லாரியுடன் பேருந்து மோது 4 பேர் பலி, 3 பேர் தீவிர சிகிச்சைக்கு அனுமதி...
Published on
Updated on
2 min read

ஹைதராபாத்தில் இருந்து 27 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு சென்னை நோக்கி புறப்பட்டது. சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச்சாலையை இன்று அதிகாலை தனியார் பேருந்து நெருங்கியபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது தனியார் பேருந்து அசுர வேகத்தில் மோதியது.

இதில் பேருந்தின் முன்பக்கமும், பக்கவாட்டு பகுதியும் பலத்த சேதமடைந்து கண்ணாடிகள் நொறுங்கின. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அமர்ந்து இருந்தவர்கள் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இடுப்பாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த தோகாலா சதீஷ்குமார், தும்மாலா ரோகித் பிரபாத் ஆகிய 2 பயணிகள், கிளீனர் ஸ்ரீதர் ஆகிய 3 பேர் உயிரிந்துள்ளனர். 

மேலும் காயமடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மாநகர பேருந்தின் நடத்துனரான இவர் கவரைப்பேட்டையில் லிப்ட் கேட்டு ஆந்திர மாநில தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். இவர் பேருந்தில் ஏறிய ஐந்தாவது நிமிடத்தில் இந்த கோர விபத்து நடந்ததில் ஜானகிராமன் பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் பயணித்து விபத்தில் இருந்து தப்பியவர்கள் அடுத்தடுத்து வந்த பேருந்துகளில் ஏறி சென்னைக்கு சென்றனர். விபத்தில் சிக்கிய பேருந்தையும், சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியையும் காவல்துறையினர் மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய சர்வீஸ் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து டேங்கர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தச்சூர் கூட்டுச்சாலையில் மேம்பாலத்தின் மேல் விபத்து ஏற்பட்ட நிலையில் மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்திய காவல்துறையினர் கவரைப்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்தை திருப்பி விட்டுள்ளனர். தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் சடலங்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com