தாயுடன் கள்ளத்தொடர்பு... 13 வயது மகளையும் திருமணம் செய்த பஸ் கண்டக்டர்... 

ஏற்கனவே 3 திருமணங்களை நடத்தி, 4வதாக 13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
தாயுடன் கள்ளத்தொடர்பு... 13 வயது மகளையும் திருமணம் செய்த பஸ் கண்டக்டர்... 
Published on
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமத்தை சோத்தவர் 41 வயதான ராதாகிருஷ்ணன். இவர் அந்த பகுதியில் இயங்கிவரும் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பகுதியிலுள்ள பெரியகருக்கை, பூதம்பூர், கானூர் பகுதிகளை சேர்ந்த 3 பெண்களுடன் ஏற்கனவே திருமணம் நடந்ததுள்ளது. 3 பெண்களுக்கும் குழந்தை இல்லாத நிலையில், ராதாகிருஷ்ணன் கருத்து வேறுபாடுகாரணமாக அவரது மனைவிகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நடத்துனர் ராதாகிருஷ்ணனுக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பேருந்தில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஏற்கனவே, அந்த பெண்ணிற்கு 3 மகள்கள் உள்ள நிலையில் தனது 13 வயது மகளுடன் தனியாக ஒரு கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, தனக்கு வாரிசு வேண்டும் என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், அந்த சிறுமியை தனது திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த ஆகஸ்டு மாதம் 6ந் தேதியன்று ஒரு கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும், சிறுமிக்கும் தாய் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.  ராதாகிருஷ்ணன் சிறுமியுடன் வற்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்ட காரணத்தால், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் நடத்துனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சிறுமியின் தாயையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com