தனது வீட்டில் குழந்தைகளுடன் அரை நிர்வாணமாக இருந்த ஆண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை. அதுவும் தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் அது அந்த நபர்தான் என்றும் அன்றைய தினமே தெரியவந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் 34 வயதான இஸ்மாயில் பினெடலோபஸ். இவருக்கு நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் என்பதால் பகல் பொழுதில் பினெடலோபஸும் இரவில் அவரது மனைவியும் பார்த்துக்கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில், அக்டோபர் 24 அன்று அவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தனது அறையில் குழந்தைகளுடன் ஒரு இளைஞன் படுத்திருப்பதை கண்டு ஆத்திரமடைந்து அவரை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்மாயில் பினெடலோபஸ் வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட ஒரு பரபரப்பான காணொளி வெளியாகியுள்ளது. ஆனால், பினெடலோபஸ் தனது குழந்தைகளுக்கோ அவரது மனைவிக்கோ எந்தவித தீங்கும் இழைக்கவில்லை என்று காவல்துறையினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொர்பாக, பினெடலோபஸின் அண்டை வீட்டுக்காரர் சில தகவல்களை தெரிவித்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், பினெடலோபஸ் இரவில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அவரது மனைவியான வெண்டி பகலில் வேலைக்கு சென்று வந்து குடும்பத்தை கவனித்துள்ளனர். அப்போதுதான் அக்டோபர் 24 அன்று பினெடலோபஸ் தனது பணிமுடிந்து விரைவாக வீட்டிற்கு வந்துள்ளார். அன்று தான் அவரது மனைவி துரோகம் செய்தது தெரியவந்துள்ளது. பினெடலோபஸின் மனைவி வெண்டி 28 வயதான நிக்கோலஸ் கார்சியா என்பவரோடு திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். இந்த தகவலே பினெடலோபஸுக்கு அன்றைய தினம்தான் தெரியவந்துள்ளது.
மேலும், அந்த அண்டை வீட்டுக்காரர், "அவர்கள் இருவரையும் ஒரு நல்ல தம்பதியினர்" என்று தெரிவித்ததோடு, பினெடலோபஸ் அமைதியான குணம் படைத்தவர் என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தினை தொடர்ந்து பினெடலோபஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பினெடலோபஸ் மீது கொடூரக் கொலைக் குற்றமும், அத்துடன் தனிப்பட்ட முறையில் ஒரு கொடிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக மேலும் ஒரு கடுமையான குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், அக்டோபர் 29ம் தேதி இந்த சம்பவம் குறித்து வெண்டியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு “நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை” என்று கூறி கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 1-ம் தேதி குற்றச்சாட்டு விசாரணை மற்றும் ஜாமீன் மறு ஆய்வு நடைபெறும் என்றும் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.